கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் அருப்புக்கோட்டை கல்லூரி போராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின்  கிடைத்தும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஜாமீன் கிடைத்து 5 நாட்களாகி உள்ளது. ஆனால் உத்திரவாத கையெழுத்து போட நிர்மலா தேவிக்கு யாரும் முன்வரவில்லை என்ற  தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பின்னணி மிரட்டல் தானாம். மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கடந்த 11 மாத ஜெயில் வாழ்க்கை நிர்மலா தேவிக்கு கடந்த 12 ஆம் தேதி தான் ஜாமீன் வழங்கியது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

நிர்மலா தேவியை ஜாமீனில் எடுப்பதற்கு, அவரது பெற்றோர்கள் உயிருடன் இல்லை. மேலும் அவருடைய சகோதரர் பெயரில் மின் ரசீது கூட இல்லை என்பதால் போதுமான ஆவணங்கள்  இல்லை என கூறி  ஜாமீன் எடுக்க முடியவில்லையாம். இதற்கிடையில் தான் அவருடைய குடும்ப நண்பர் ஒருவர் ஜாமீனில் எடுக்க முன்வந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் வரும் 19 ஆம் தேதி, நிர்மலா தேவி வெளிவரலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதை எல்லாம் தாண்டி, ஜாமீன் எடுக்க முன்வரும் நபர்களுக்கு மிரட்டல் வருவதாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.