ரேப் செய்யப்பட்ட பெண் கொடுத்த நெருக்கடி! வேறு வழியில்லாமல் காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரை தட்டித்தூக்கிய போலீஸ்

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கடந்த 13ம் தேதி  விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

Rape case.. Mannadi Kalikambal Temple Priest Karthi Munusamy Arrest tvk

 தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கடந்த 13ம் தேதி  விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்த விவகாரத்தை அடுத்து கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: தீர்த்தம் கொடுத்து ஆசையை தீர்த்த கோவில் பூசாரி! அவரை போலீஸ் இன்னும் கைது செய்யாததால் பெண் எடுத்த அதிரடி முடிவு

இந்நிலையில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பெண்  கார்த்திக் முனுசாமி தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தான் அளித்த புகார் அடிப்படையில் அவரை இன்னும் காவல்துறை கைது செய்யவோ அல்லது அவரிடம் விசாரணை நடத்தவோ? இல்லை. இதுதொடர்பான வழக்கை போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும், அதனால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இதையும் படிங்க:  School Student Murder: ஷாக்கிங் நியூஸ்.. 13 வயது சிறுவன் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. நடந்தது என்ன?

இந்நிலையில், பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios