ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘கோமாளி' பட டிரைலர்  நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.  அதில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமான காமெடி காட்சி இருந்தது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் ஆவேசம்  அடைந்தனர்.

கோமாளியை புறக்கணிப்போம்’ என ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் டிவிட்டரில் பிரபலமானது. இந்த டிரெய்லரை பார்த்த கமல்ஹாசன், உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து, ‘ரஜினியை விமர்சிக்கும் காட்சி வருகிறது. இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை' என்று கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய காமெடி வசனத்தை நீக்குவதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்குகிறோம்’ என்றார்.