இந்த காலத்துல இப்படி ஒருத்தரா? அசத்தும் சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்கா.!
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராஜி. பலரால் ராஜி அக்கா என அழைக்கப்படும் இவர் ஏழை குழந்தைகளின் வாழ்வு உயரவேண்டும் என்ற எண்ணத்துடன், அதிக நேரம் ஆட்டோ ஓட்டி அதில் வரும் பணத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
இந்த காலத்துல இப்படி ஒருத்தரா? அசத்தும் சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்கா.!
பிரசவத்திற்கு இலவசம் என பல ஆட்டோக்களில் எழுதியிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், சாதாரண நிலையில் உள்ள ஒரு பெண்மணி பிரசவத்திற்கு மட்டுமல்ல, பெண்கள், முதியவர்கள், அரசுப் பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் இலவசமாக ஏற்றி செல்கிறார்.
பெண்கள், முதியவர்களுக்கு இலவசம்
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராஜி. பலரால் ராஜி அக்கா என அழைக்கப்படும் இவர் ஏழை குழந்தைகளின் வாழ்வு உயரவேண்டும் என்ற எண்ணத்துடன், அதிக நேரம் ஆட்டோ ஓட்டி அதில் வரும் பணத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளை இலவசமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் ராஜி. ராஜி ஊபரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஊபர் பயணங்களை முடித்துக் கொண்டு, இரவு வீட்டிற்கு வரும் வழியில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் கட்டணம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுகிறார். இரவு 9 மணிக்கு மேல், 5 கிலோ மீட்டர் தூரம்வரை இலவசமாக அவர்கள் பயணிக்க உதவுகிறார்.
இதையும் படிங்க;- ஆசிரியை மகாலட்சுமி மாலையில் பணியிடை நீக்கம்.. 6 மணி நேரத்தில் சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட்ட பின்னணி..!
பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்கும் ராஜி
அதுமட்டுமில்லாமல் ஏதேனும் அவசரம் என்று பெண்கள் இரவில் எந்த நேரத்தில் ஃபோன் செய்தாலும் அவர்களுக்கு சென்று உதவுகிறார். மூன்று பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறார். அதாவது மாதத்திற்கு 2 நாட்கள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆட்டோ ஓட்டி, அதில் வரும் பணத்தை அதற்காக அவர் தொடங்கியுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறார். அந்தப் பணம் ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்கிறார்.
23 வருடங்களாக நான் ஆட்டோ ஓட்டும் ராஜி
இதுதொடர்பாக பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி கூறுகையில்;- கடந்த 23 வருடங்களாக நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இரவு 10 மணிக்கு மேல் மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கும் இலவச சவாரி வழங்குகிறேன். அவசர காலங்களில் மருத்துவமனைக்கு இலவச சவாரிகளையும் வழங்குகிறேன் என்று தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் கல்விக்கு உதவவும், யாரிடமும் எந்த நிதியுதவியும் பெறாமல், எந்த ஆணின் உதவியையும் எதிர்பார்க்காமல் தானே களத்தில் இறங்கி இருக்கும் ராஜி அக்காவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இதையும் படிங்க;- திருமணமான 9 நாட்களில் தாலியை கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் செய்த காரியம்.. சிக்கிய பரபரப்பு கடிதம்..!