வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகத்தில் இன்றும் நாளையும் 8 மாவட்டங்களில் கனமழையும், வரும் 24, 25 -ந் ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்குஅந்தமான்கடற்பகுதியில்நிலவும்வளிமண்டலமேலடுக்குசுழற்சியானது, தமிழககடலோரபகுதிவரைநீடிப்பதன்காரணமாக, இன்றும்நாளையும்பலஇடங்களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் இன்றுதிருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்உள்ளிட்ட 8 மாவட்டங்களில்ஓரிருஇடங்களில்இடிமின்னலுடன்கூடியகனமழையும்பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்

ஏனையவடமாவட்டங்கள்மற்றும்புதுவை, காரைக்கால்பகுதிகளில்ஒருசிலஇடங்களில்இடிமின்னலுடன்கூடியமிதமானமழையும், தென்மாவட்டங்களில்ஒருசிலஇடங்களில்லேசானதுமுதல்மிதமானமழையும்பெய்யக்கூடும்எனவும் கூறியுள்ளார்.

நாளைகோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டாமாவட்டங்கள்மற்றும்காரைக்கால்பகுதிகளில்ஓரிருஇடங்களில்இடிமின்னலுடன்கூடியகனமழையும்பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னையைபொறுத்தவரைஅடுத்த 48 மணிநேரத்திற்குவானம்பொதுவாகமேகமூட்டத்துடன்காணப்படும். நகரின்ஒருசிலஇடங்களில்இடிமின்னலுடன்கூடியலேசானதுமுதல்மிதமானமழைபெய்யக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 30 மற்றும்குறைந்தபட்சவெப்பநிலை 24 டிகிரிசெல்சியஸைஒட்டிஇருக்கும்என தெரிவித்துள்ளார்.

கூடுதலாக டெல்டாமாவட்டங்களில்நாளையும்,நாளைமறுநாளும்கனமழைபெய்யும்எனவும், மேலும்வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில்கடலோரமாவட்டங்கள்மற்றும்புதுவை, காரைக்கால்பகுதிகளில்ஓரிருஇடங்களில்இடிமின்னலுடன்கூடியகனமுதல்மிககனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

தெற்குஉள்மாவட்டங்களில்ஓரிருஇடங்களில்இடிமின்னலுடன்கூடியகனமழையும், ஏனையமாவட்டங்களில்அநேகஇடங்களில்மிதமானமழையும்பெய்யக்கூடும்என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.