வெப்ப சலனம் காரணமாக அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக திருவள்ளூர் கடலூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரளாவில் குறைந்து உள்ளதால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மழை பெய்ய எந்த ஒரு சாதகமான சூழலும் இல்லை என்றும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் மானாமதுரையில் ஒரு சென்டி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளது என்பதும்  கூடுதல்      
தகவல்.