தமிழகத்தில், 11 மாவட்டங்களில், இன்று வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் பகுதியில் தீவிரமாகியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், வெப்பச்சலன மழை பெய்து வருகிறது.

நேற்று காலை, வேலூர் மாவட்டம், சோளிங்கரில் மழை பெய்துள்ளது. ஆர்கே பேட்டை, நீலகிரி தேவாலா, திருத்தணி, போளூர், அரக்கோணம், சென்னை விமான நிலையம், வந்தவாசி, செஞ்சி, ஓசூர், மரக்காணம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.


இன்றைய வானிலையை பொறுத்தவரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மற்ற இடங்களில், பரவலாக வெயில் நிலவும் என கூறப்படுகிற- சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.