ரயில்வே துறையில், முதன்முறையாக, சரக்கு ரயிலில் விளம்பரம் வாயிலாக வருமானத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே துறையில் முதன்முறையாக, 'பிராண்டிங் ஆன் வீல்ஸ்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சரக்கு ரயிலில் விளம்பரம் செய்ய அனுமதியளித்துள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ரயில்வே துறைக்கு, ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது, 'டால்மியா சிமென்ட்' நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டால்மியா சிமென்ட் நிறுவனம், தென்கிழக்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள, சரக்கு ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தில், 5 ஆண்டுகளுக்கு விளம்பரம் செய்யும்.இதனால், அந்நிறுவன தயாரிப்புகள், ஏராளமான மக்களை சென்றடையும்.தென்கிழக்கு ரயில்வேக்கு ஒரு கனிசமான வருவாய் கிடைக்கும்.

ஏற்கனவே, தென்கிழக்கு ரயில்வேயில், ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் நகரில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், ஹவுரா நகருக்கு செல்லும், 'ஸ்டீல் எக்ஸ்பிரஸ்' அதிவேக பயணியர் ரயிலில், விளம்பரதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விளம்பரம் வாயிலாக வருமானத்தை அதிகரிக்க, ரயில்வே துறையில், மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றனர்.