Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல்…. முக்கிய அறிவிப்பு இன்று வெளியகிறது…!

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரியில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகிறது.

puduchery panjayat election date announced today
Author
Puducherry, First Published Sep 22, 2021, 9:24 AM IST

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரியில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகிறது.

 

puduchery panjayat election date announced today

 

புதுச்சேரி யூணியன் பிரதேசத்தில் இதுவரை 2 முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வார்டு மறுவரை செய்யப்பட்டு இடஒதுக்கீடு முறை அறிவிக்கப்பட்டது.

 

puduchery panjayat election date announced today

இதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட விவரங்களை இன்று நண்பகல் 12 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவிக்கிறார். புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன் பதவிகள்,  10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரத்து 149 பதவிகளுக்கும், 116 நகராட்சி கவுன்சிலர் பதவி, 108 கிராம பஞ்சாயத்து தலைவர், 812 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வார்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 936 பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து  4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios