குறிப்பாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். என்றாலும். இந்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் செங்கோட்டையன். எனவே 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என உறுதியாக எதிர்பார்க்கப்பட்டது.
5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.
என்றாலும். இந்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் செங்கோட்டையன். எனவே 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என உறுதியாக எதிர்பார்க்கப்பட்டது. பொதுத்தேர்வுக்கு அரசியல் கட்சிகளைத்தாண்டி பெற்றோர்களும் மாணவர்களுமே எதிர்ப்பு தெரிவித்ததால், அரசுக்கு தர்மசங்கடம் ஆனது. இந்நிலையில் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைபடியே தேர்வு நடத்தப்படும்” செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 5, 2020, 7:17 AM IST