Night Custody: இனி லாக்அப் டெத் நடக்கவே கூடாது.. காவல் துறையை அலறவிட்ட சைலேந்திர பாபு.. இரவு விசாரணைக்கு நோ.!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் வேலையில் அடுத்தடுத்து நிகழும் காவல்நிலைய மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பயத்தை உண்டாகியிருக்கிறது.
கைதானவர்களிடம் இரவு கஸ்டடி விசாரணை நடத்தக்கூடாது. மாலை நேரத்திற்குள் சிறையில் அடைக்க வேண்டும் என காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லாக்அப் டெத்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் வேலையில் அடுத்தடுத்து நிகழும் காவல்நிலைய மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பயத்தை உண்டாகியிருக்கிறது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு சென்னை, திருவண்ணாமலை விசாரணைக் கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது. கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இரவு விசாரணை கூடாது
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தொடர்ந்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இவற்றை தடுக்க குற்றவாளிகளை கைது செய்த உடனே நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவிட வேண்டும். இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரிக்கக்கூடாது. கைது செய்யப்படும் அனைவரும் மாலை 6 மணிக்குள் சிறைகளில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.