தளபதி விஜயுடன் இணையும் பிரபு..தெறி கூட்டணி எந்த படத்தில் தெரியுமா?

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 66 வது படத்தில் பிரபு இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Prabhu joins thalapathy Vijay next

மாஸ்டர்  படத்தை நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்களுடன் செல்வராகவன் , ஷைன் டாம் சாக்கோ , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , VTV கணேஷ் , ஷாஜி சென் , அபர்ணா தாஸ் , சதீஷ் கிருஷ்ணன் , லில்லிபுட் மற்றும் அங்கூர் அஜித் விகல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே தோன்றியிருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அனிரூத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டிருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட்டது. கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படித்தது பீஸ்ட் .

Prabhu joins thalapathy Vijay next

படம் வெளியாகும் முன்னரே அரபிக் குத்து பாடல் முதல் சிங்குளாக வெளியாகி ரசிகர்களை குதுக்கப்படுத்தியது. இந்த பாடல் ரீல்ஸ் வடிவில் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.  இந்த பாடல் யூடியூப்பில் மட்டும் 200 மில்லியன் வியூவர்ஸுக்கு மேல் வெளியான கொஞ்ச நாட்களில் பெற்றிருந்தது. 

இதையடுத்துஇ விஜய் தற்போது 66 வது படத்திற்காக வம்சியுடன் இணைந்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் கதைக்களத்தை கொண்டுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இரண்டு ஆண்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் சரத்குமார், ஷ்யாம், ரஷ்மிகா இணைந்துள்ளனர். விஜய்க்கு சரத்குமார் தந்தையாக இந்த படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

Prabhu joins thalapathy Vijay next

அரபிக் குத்து படமாக்கப்பட்ட அதே செட்டில் இந்த படத்தின் முதல் பாடலும் படமாக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 4 நாட்கள் சூட்டிங் நடைபெற்றதை தொடர்ந்து. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அங்குயி சண்டை காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதையடுத்து படத்தின்மற்ற காட்சிகள் அனைத்தும் சென்னையில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபு இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே புலி, தெறி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.   

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios