மின்சார வாரியத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த நேரங்களில் பராமரிப்பு பணி நடைபெறும் மின்வாரியத்திற்கு உட்பட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்சார தடை ஏற்பட இருக்கிறது.

இதுகுறித்து சென்னை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எஸ்.ஆர்.எம் பகுதியில் ஆலபாக்கம் மாத்திரை கம்பெனி, ஜமால் குடியிருப்பு, டெலிபோன் எக்ஸ்சேஞ், ஆலபாக்கம் ரோடு ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.

போரூர் பகுதியில் குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, விக்னேஸ்வரா நகர், எம்.எஸ் நகர், பெல் நகர், ஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், ராஜலட்சமி நகர், காமாட்சி நகர், சத்யநாராயணா புரம், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி நகர், ராஜ ராஜ நகர், பஜனை கோயில் தெரு ஒரு பகுதி, மௌலிவாக்கம், மாங்காடு சாலை, ஏ டி கோவிந்தராஜ் நகர், ரங்கா நகர், லட்சமி நகர், முருகன் நகர், ஸ்டாலின் நகர், ஜோதி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் நாளை நிறுத்தப்படும்.

வேளச்சேரி கிழக்கு பகுதியில், தந்தை பெரியார் நகர், அமிர்தம் அவன்யு,100 அடி சாலை, உதயம் நகர், பவானியம்மன் கோவில் தெரு, பரணி தெரு, கல்லுக்குட்டை, பாரதி நகர் ஆகிய இடங்களில் நாளை ஒரு நாள் மின்தடை இருக்கும்.

மாதவரம் பகுதியில் கே.கே நகர், அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் தெரு, கண்ணபிரான் தெரு, மெக்டீஸ் காலனி, சத்தியராஜ் நகர், ஆர்.சி குயின்ஸ் பார்க் குடியிருப்பு, ஜம்புலி நியூ காலனி, கே.கே.ஆர் எஸ்டேட் ஆகிய இடங்களில் மின்விநியோகம் நாளை நிறுத்தப்படும்.

சிட்லப்பாக்கம் பகுதியில் சரஸ்வதி நகர், பாபு தெரு, பாபன் சாமிகள் சாலை, வைதியலிங்கம் சாலை, மருதுபண்டி தெரு, யூ.வி சாமிநாதன் தெரு, ராமகிருஷ்ணன் நகர், ராகவேந்திரா நகர், திருமுருகன் சாலை, ராமனர் தெரு, சேது நாராயணா தெரு, எம்.எம்.டி. ஏ நகர் ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்பட இருக்கிறது.

இந்த அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

இவ்வாறு சென்னை மின்சார வாரியம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.