சென்னையில் காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியும், ஆபாச படங்களை காட்டியும் தன்னுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றி விட்டதாக ஆயுதப்படை காவலர் மீது இளம்பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அயனாவரத்தை சேர்ந்த சரஸ்வதி (24) என்பவர் நேற்று அளித்த புகாரில்;- கடந்த 2015-ம் ஆண்டு அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் பிஎஸ்பி படித்தேன். தற்போது நான் அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு காவல்துறை பணி தேர்வுக்காக நான் கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் பின்னால் உள்ள மைதானத்தில் நான் ஓட்டப்பந்தையம் பயிற்சி பெற்றேன். அப்போது என்னுடன் அதே மைதானத்தில் வீரமணி என்பவர் பயிற்சி எடுத்தார். 

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே இளம்பெண் காவலர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற வீரமணி பணியில் சேர்ந்துள்ளார். அந்த இளம்பெண் அழகுக் கலை நிபுணராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மே 27-ம் தேதி என்னை வீரமணி அவரது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைப்பதாக அவரது வீட்டிற்கு அழைத்தார். அதை நம்பி நான் சென்றேன். ஆனால் வீட்டில் அவரது பெற்றோர்கள் யாரும் இல்லை. வீரமணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது என்னிடம் வீரமணி திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை காட்டி என் விருப்பம் இல்லாமல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபோல பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.  

வீரமணியின் தந்தை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் மகனின் காதல் விவகாரம் அவருக்கு தெரிய வந்துள்ளது. இதன் பிறகு இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்த வீரமணியின் தந்தை, தனது மகனுக்கு வேறு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும் அவனை மறந்துவிடும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வீரமணியும் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து வீரமணி மற்றும் அவரது தந்தையை காவல்நிலையம் வரவழைத்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஒப்புக்கொண்ட காவலர் வீரமணியும் அவரது தந்தையும் பிறகு அதிக வரதட்சணைக் கேட்டு திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் காதலன் வீரமணி மீது புகார் கொடுத்துள்ளார்.

அவர் மிரட்டும் ஆடியோ, சேர்ந்து  எடுத்து கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாக கொடுத்துள்ளேன். தன் மகனை பற்றி புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக வீரமணியின் தந்தை மிரட்டுகிறார். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து  ஏமாற்றிய வீரமணியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். பெண் ஒருவர் ஆயுதப்படை காவலர் மீது பலாத்கார புகார் கூறியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.