Asianet News TamilAsianet News Tamil

#BREAKING பிரபல நரம்பியல் மருத்துவர் கொடூரமாக வெட்டிக்கொன்ற வழக்கு... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

popular neurologist doctor subbaiah murder case...Court judgment
Author
Chennai, First Published Aug 4, 2021, 11:28 AM IST

சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

popular neurologist doctor subbaiah murder case...Court judgment

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்கயைும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

popular neurologist doctor subbaiah murder case...Court judgment

இந்நிலையில், தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், கூலிப்படையை சேர்ந்த ஐயப்பனை தவிர குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios