சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை வழியாக பறக்கும் ரயிலில் கடற்கரைக்கு 20 பேர் கொண்ட  மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். கடற்கரை ரயில் நிலையம் வந்ததும் இவர்கள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டனர். 

இதை பார்த்த ரயில்வே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் இரண்டு பிரிவுகளாக மோதிக் கொண்ட 
9 மாணவர்களை ரயில்வே போலீசார், கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதில் ஒரு மாணவனிடமிருந்து பட்டா கத்தியை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.பிடிபட்ட 9 மாணவர்களையும் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வருடத்தில் தொடர் கதையாகும் மாணவர்களின் கத்தி சண்டை கலாசாரத்தில் இது நான்காவது கத்தி சண்டை மோதல் என்பது குறிப்பிடத்தக்கது.