கனமழை எதிரொலி... சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்!! காவல் துறை அறிவிப்பு!
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கியதை அடுத்து மழையில் பெய்யும் அளவு அதிகரித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் அனுமதியின்றி போராட்டம்.. பாஜக தலைவர் அண்ணாமலை கைது - பரபரப்பு !
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கணேசபுரம் மற்றும் இரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் கணேசபுரம் மற்றும் இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியின் பேமஸ் பைக் திருடனை அலேக்காக தூக்கிய போலீஸ் - வைரல் CCTV வீடியோ !!
பொதுமக்கள் போக்குவரத்திற்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்படுள்ளது. சுரங்கப்பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். அதுபோலவே, கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.