சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு.. ஒருவர் கவலைக்கிடம்..!

சென்னை திருமுல்லைவாயில் அருகே சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது வீட்டில் 10 அடி ஆழமுள்ள குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை நேற்று ஆட்களை வைத்து சுத்தம் செய்த நிலையில், இன்று மீண்டும் 2 அடி அளவுக்கு தண்ணீர் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை சுத்தம் செய்வதற்காக பிரேம்குமார் தொட்டிக்குள் இறங்கியுள்ளார்.

poison gas attack...3 people death in chennai

சென்னை திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்ததம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீர் தொட்டியில் விஷவாயு 

சென்னை திருமுல்லைவாயில் அருகே சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது வீட்டில் 10 அடி ஆழமுள்ள குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை நேற்று ஆட்களை வைத்து சுத்தம் செய்த நிலையில், இன்று மீண்டும் 2 அடி அளவுக்கு தண்ணீர் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனைச் சுத்தம் செய்வதற்காக பிரேம்குமார் தொட்டிக்குள் இறங்கியுள்ளார்.

3 பேர் பலி

அப்பொழுது விஷவாயு தாக்கி பிரேம்குமார் மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது மகன் பிரவீன்குமார் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் ஆகியோர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்பொழுது பிரேம்குமார், பிரவீன்குமார், பிரமோத் ஆகிய 3 பேரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், சாரநாத்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஷவாயு தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios