இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

சென்னையில் கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாஜக அரசு 100 நாட்களில் என்ன சாதித்தது என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். 

சாதனை விவரம்;-

* தேர்தல் வாக்குறுதிப்படி 370 சட்டப்பிரிவை நீக்கினோம். ஒவ்வொரு தேர்தலின் போதும், பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு வந்த விஷயம் தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உதவிகரமாக இல்லை. தேசிய மகளிர் ஆணையமும் செயல்படாமல் இருந்தது. இந்த சீர்திருத்தத்தால் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். நிறைய முதலீட்டாளர்கள் வருகை புரிவர்.

* சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் பட்டியலின மக்கள் பயன் அடைவார்கள்.

* சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரம் மேம்படும்.

*  உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு அரசு முடிவு செய்துள்ளது.

* ஒரே வரியான ஜிஎஸ்டி மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டுள்ளது. 

* முத்தலாக் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

* 1.95 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

*  2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
 
* விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 3 தவணையாக மொத்தம் ரூ.6,000 அளிக்கப்படுகிறது. இது தவிர ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது.

* இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடியாக உயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

* மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைக்கப்பட்டுள்ளது.

* ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம் 

* ஃபிட் இந்தியா திட்டம் மூலம் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊக்குவிக்கப்படும்.

* பயங்கரவாதத்தை தடுக்க, சர்வதேச அளவில் இந்தியா பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.

* பல்வேறு காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.