ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்.. என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இணைந்த தடயவியல் நிபுணர்கள்.!
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக சாலைகளில் ஒன்று சென்னை கிண்டி. இந்த சாலையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மேலும் இரண்டு வெடிக்காத பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நீட் தேர்வுக்கு விலக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில் (என்ஐஏ) தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஒப்படைத்தது.
இதையும் படிங்க;- AIADMK Case: இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம்.. கதறிய ஓபிஎஸ்.. கைவிட்ட உச்சநீதிமன்றம்..!
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.