ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.. பிரபல ரவுடியை அலேக்காக தூக்கிய போலீஸ்.. பரபரப்பு சம்பவம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Petrol bomb attack in front of Governor's House in Chennai: Rowdy Karukka Vinod arrested-rag

சென்னை, கிண்டியில் ராஜ்பவன் என்று அழைக்கப்படும் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இன்று ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியதாகவும், இதனால் பயங்கர சத்தம் உண்டானதாகவும் பொதுமக்கள் கூறினர்.

Petrol bomb attack in front of Governor's House in Chennai: Rowdy Karukka Vinod arrested-rag

அங்கு பெட்ரோல் குண்டு வெடித்ததால், அங்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் ஈடுபட்ட காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Petrol bomb attack in front of Governor's House in Chennai: Rowdy Karukka Vinod arrested-rag

அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios