சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. தினமும் 20 காசுகளுக்கு மேலாக அதிகரித்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 77.28 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை 71.09 ரூபாயாக நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது.

முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.