இன்று காலை 6 மணியில் இருந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து 77.28 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து 71.09 ரூபாயாக இருக்கிறது.

சவூதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் சில நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரையிலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

கடந்த சில நாட்களாக 20 காசுகளுக்கு மேலாக விலை உயர்வு இருந்து வரும் சூழலில், இதே நிலை நீடித்தால் விரைவில் பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.