சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் அலைகள் தாக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரிக்கிறது.

எண்ணெய் கூடங்களில் இருக்கும் பாதிப்புகள் நீங்க சில வாரங்களாக கூடும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. ஐந்து ரூபாயிலிருந்து ஆறு ரூபாய் வரையிலும் விலை உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து 77.12 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றிலிருந்து 7 காசுகள் அதிகரித்து 70.98 ரூபாயாகவும் இருக்கிறது.