பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்கபட்டு வந்தது. அது மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தது. எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட பாதிப்பு நீங்க ஒரு சில வாரங்கள் ஆக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 5 ரூபாயில் இருந்து 6 ரூபாய் வரையில் விலை உயர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 30 காசுகளுக்கு மேலாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.37  காசுகள் உயர்ந்து 75.93 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.30 காசுகள் உயர்ந்து  70.07 ரூபாயாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.