பெட்ரோல் மற்றும் டீசல் விலை செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து உயராமல் இருந்தது. இடையிடையே விலை குறைந்தும் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயராமல் இருந்தாலே போதும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீண்டும் உயரத் தொடங்கியது. தொடர்ந்து 4 நான்கு நாட்கள் உயர்ந்த விலை நேற்று உயராமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.14 காசுகள் உயர்ந்து 74.99 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.16 காசுகள் உயர்ந்து 69.31 ரூபாயாக இருக்கிறது.

இதற்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசல் மாதம் இருமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்தது. அந்த செயல்பாடு மாற்றப்பட்டு பின்னர் தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது . தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.