சென்னையில் பெட்ரோல்,13 காசுகள் குறைந்து லிட்டருக்கு 76.25 ரூபாயாக இருக்கிறது. அதே போல டீசல்,16 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70.35 ரூபாயாக விற்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. தினமும் 25 காசுகளுக்கு மேல் விலை உயர்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உயர்த்தப்படாத விலை இன்றும் அதிகரிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.