சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் ஏற்றத்தில் இருந்து வந்தது.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த விலை, நேற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக விலை மீண்டும் அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, 19 காசுகள் குறைந்து 1 லிட்டருக்கு 77.21 ரூபாயாக இருக்கிறது. அதே போல டீசல் விலை 9 காசுகள் குறைந்து 1 லிட்டருக்கு 71.15 ரூபாயாக விற்கப்படுகிறது.

முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாள்தோறும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது.