பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் ஒரே விலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று விலை மேலும் குறைந்து அறிவிப்பு வந்திருக்கிறது.

அந்தவகையில் சென்னையில் இன்று  - 0.05 காசுகள் குறைந்து  ஒரு லிட்டர் பெட்ரோல் 74.75 ரூபாயாக உள்ளது. அதே போல - 0.05 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் 68.89 ரூபாயாக இருக்கிறது.