Asianet News TamilAsianet News Tamil

இப்படியே போகட்டும்.. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து வாகன ஓட்டிகள் கருத்து!!

கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் குறைந்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

petrol and diesel rate comes down
Author
Tamil Nadu, First Published Sep 7, 2019, 11:57 AM IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

petrol and diesel rate comes down

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும். அது போல கடந்த சில  நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்றும் இன்றும் விலை குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

petrol and diesel rate comes down

அந்த வகையில் சென்னையில் நேற்று -0.09 காசுகள் குறைந்த  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று மீண்டும் -0.09 காசுகள் குறைந்து 74.57  ரூபாயாக உள்ளது . அதே போல நேற்று -0.05 காசுகள் குறைந்த ஒரு லிட்டர் டீசல் விலை இன்று மீண்டும் -0.05 காசுகள் குறைந்து 68.79  ரூபாயாக இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயர்த்தப்படாமல் இருந்தாலே போதும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios