Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோயில்கள் திறப்பா? சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கொடுத்த விளக்கம் என்ன?

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சிலை ஊர்வலகங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. 

Permission to open small temples on vinayagar chathurthi
Author
Chennai, First Published Sep 6, 2021, 4:20 PM IST

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறிய கோயில்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு, வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு  உறுதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சிலை ஊர்வலகங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. 

Permission to open small temples on vinayagar chathurthi

இந்நிலையில், இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஊட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட  அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

Permission to open small temples on vinayagar chathurthi

அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு  தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டை போலவே சிறிய கோவில்களின் முன்பு  வைக்கப்படும் சிலைகளை, இந்து அறநிலையத்துறை எடுத்து நீர்நிலைகளில் கரைக்கும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios