சென்னை ஆவடியில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). இவர் கிறிஸ்தவ மத போதகர். திருமலைநகரில் சர்ச் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போதகருக்கும் ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு சாலோம் நகரை சேர்ந்த ஏஞ்சலின்(46) என்ற பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை போதகர் டேவிட்டிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, போதகர்சிறப்பு ஜெபம் செய்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்  என்று கூறியுள்ளார். அத்துடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்துள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிராத்தனை செய்யுங்கள் உங்களது கஷடங்கள் முழுமையாக தீரும் என கூறியுள்ளார்.

இதன்படி கடந்த 17ம் தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள சர்ச்சில் ஏஞ்சலின் முட்டிப்போட்டு ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென போதகர் அந்த பெண்ணை பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டப்படி வெளியே ஓடி வந்துள்ளார். இதனையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மதபோதகரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.