சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே போலீசார் புதிய திட்டத்தை கையில் எடுத்தனர் . அதற்கு  "ஆப்ரேஷன் நம்பர் பிளேட்" 
என பெயரிடப்பட்டது .

இந்த திட்டத்தின் படி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் பல நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் , ரயில்நிலையங்களை சுற்றி சந்தேகம் கொள்ளும்படியாக இருக்கும் வாகனங்களை  பறிமுதல் செய்ய முடிவெடுத்தனர் . 

அதன்படி சென்னையை சுற்றி 250 வாகனங்களும் , தமிழகம் முழுவதும் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில்  உள்ள 16 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 866  இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது .

இந்த வாகனங்கள் அனைத்தும் அதன் என்ஜின் நம்பரை கொண்டு யாருடைய வாகனம் ?? ,என்ன காரணத்திற்காக நீண்ட நாட்களாக எடுக்கப்படாமல் இருக்கிறது என விசாரணை நடத்தப்பட உள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர் ..