Asianet News TamilAsianet News Tamil

#BREAKING தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு  சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

Online Rummy ban law Cancel... chennai high court Verdict
Author
Chennai, First Published Aug 3, 2021, 3:05 PM IST

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு  சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

Online Rummy ban law Cancel... chennai high court Verdict

இந்த வழக்குகள்  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்கு தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது. 

ஆனால், ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லி கட்டிற்கு தடை விதித்தும்,   மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாதிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு,  ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும்,  இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும்  சூதாட்டம் இல்லை எனறும் வாதிட்டனர்.

Online Rummy ban law Cancel... chennai high court Verdict

மேலும், சட்டத்தை இயற்ற முறையாக எந்தவொரு காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை  எனவும் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர்,  இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும்,, பொது நலனை கருத்தில் கொண்டு  இந்த சட்டம் இயற்றபட்டதாகவும், இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்தனர்.

மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios