வெங்காயம் மட்டுமின்றி அனைத்து காய்கறிகளின் விளைவுகளையும்  கட்டுக்குள் வைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித் அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.  தொடர் மழை காரணமாக  வெங்காயம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது கடந்த சில  தினங்களுக்கு முன்பு  ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது .  அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.  இந்நிலையில் அதன் விலை சற்று குறைந்துள்ள நிலையில்,  சென்னை கோபாலபுரத்தில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

 

அப்போது பசுமைப் பண்ணை கடைகளில் போதுமான அளவு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் இருப்பு உள்ளதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.  அங்கு குறைந்த விலையில் மக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்வதையும் அமைச்சர்  உறுதி செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெளிச் சந்தையை விட தரமான வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாயில் தமிழகம் முழுவதிலும் அரசு சார்பில் செயல்பட்டு வரும் அனைத்து பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடிகளிலும்  கிடைப்பதாக கூறினார்,  வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா,  ஆந்திரா,  மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து, வரத்து குறைந்ததாலும், பருவமழை காரணமாகவும் வெங்காயம் விலை ஏற்றத்துடன் இருந்தது என்றார். 

இருப்பினும் விலையை கட்டுக்குள் வைக்கவும் அனைத்து காய்கறிகளும் தொடர்ந்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும் அரசு நடவடிக்கை  எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் பேசிய வார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின்படி வெங்காயம்  விளையும் இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.