ஆசிர்வாதம் செய்கிறேன் என்ற பெயரில், கோயிலுக்கு வரும் பெண்களிடம்  பாலியல்  சீண்டலில் ஈடுபட்டதாக கோயில் ஊழியர் மீது திடீர் புகார் எழுந்துள்ளது.  பிரசித்தி பெற்ற கோவிலில் அரங்கேறிய இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அதிகம் பெண்கள் வந்து  செல்வார். குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் வேண்டி  இக்கோவிலுக்கு  அதிகம் இளம்பெண்கள்  வருவதால் இக்கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு என்கின்றனர். இப்படிப்பட்ட கோவிலில் நடந்துள்ள இச்சம்பவம்  பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இக்கோயிலில்  பணிபுரியும் ராமலிங்கம் கோவிலில் பூஜை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில்  கோயிலுக்கு வரும் பெண்களிடம் ஆசிர்வாதம் என்ற பெயரில் இவர் பெண்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது கோவிலுக்கு வரும் பெண்களை மயிலிறகால் உடலெங்கும் வருடி பெண்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். பூஜை ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது,  கோயிலின் மற்றோரு புறத்தில் அமர்ந்து பெண்களுக்கு ஆசிர்வாதம் கொடுக்க தொடங்கிவிடுவார் ராமலிங்கம் என்கின்றனர்.  வயதான பெண்கள் வந்தால் தலையில் தொட்டு ஆசிர்வாதம் செய்வதுடன்,  இளம் பெண்கள் வந்தால் மட்டும் மயிலிறகால் அவர்களின் உடலெங்கும் வருடி ஆசிர்வாதம் செய்து பாலியல்  சீண்டலில் ஈடுபடுவது ராமலிங்கத்தில் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஐப்பசி திருவிழாவில் பல பெண்களை ராமலிங்கம் இவ்வாறு ஆசிர்வாதம் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராமலிங்கத்தில் வித்தியாசமான இச் செயலை பார்த்து அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர். 

கோயில் செயல் அதிகாரியிடம்,  இதுகுறித்து புகார் கொடுக்க அந்த அலுவலர் இது குறித்து  விசாரணை செய்து, அதில் உண்மை இருப்பதைக் கண்டு,  ராமலிங்கத்தை பணி நீக்கம் செய்துள்ளார் . கோயிலுக்கு வரும் பெண்களிடம் மயிலிறகால் வருடி ஊழியர் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.