கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வருங்காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.  

கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை கொரோனா பரிசோதனை செய்த நபர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  கொரோனா உறுதியானவர்கள் மருத்துவமனை, மையம் அல்லது அவரவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் கொரோனா பரிசோதனை செய்த நபர் தனக்கு கொரோனா இல்லை என உறுதியானால் வழக்கம்போல் அவரது பணியை தொடங்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கிய நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தல் அவசியம் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது  குறிப்பிடத்தக்கது.