தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. முதலில் தென்ஆப்பிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தற்போது இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளில் பரவி உள்ளது. இது டெல்டாவை விட மிகத் தீவிரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 2ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 19 நாளில் தொற்று எண்ணிக்கை 200ஐ தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 54 பேரும், தெலுங்கானா 24 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், ஜம்மு காஷ்மீரில் 3 பேரும், ஒடிசா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 2 பேரும், ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்காளம் மற்றும் சண்டிகரில் தலா ஒருவர் என மொத்தம் 220 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 89 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 13 பேரின் முடிவுகளில் ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதை விரைவில் அதிகாரப்பூர்வமாக சுகாதாரத்துறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்ததையடுத்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.