3வது மொழி படிப்பதில் தவறு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:

நியூட்ரினோ திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டம். இந்த திட்டத்தோடு அணு குண்டு வீசப்பட்டதால் அழிந்து போன ஹிரோசிமா, நாகசாகி நகரங்களோடு ஒப்பிடுவது வருத்தம் அளிக்கிறது.

முத்தலாக் மசோதாவை இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஓட்டுக்காக இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்கும் உரிமையை எதிர்க்கிறார்கள். முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டும். பிரதமரின் தமிழக வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் இன்னும் வரவில்லை. தமிழகம் மேம்பட 3வது மொழி படிப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை கட்டாயப்படுத்தக்கூடாது.