இன்று  முதல் வரும் 18ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதால், தமிழகம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று முதல் 18ம்தேதி வரை தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.  தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.