கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.. கோவையில் எந்த ஒரு அவசர உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி..!
தமிழகம் முழுவதும் கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதகாவும் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு என எந்த ஒரு அவசர உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் கோவை மாவட்டதிற்கு என எந்த ஒரு அவசர உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், கோவை மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதிகளில் கொரோனா பரிசோனை மையங்கள் முறையாக இல்லை, நகரப்பகுதிகளில்தான் பரிசோதனை நிலையங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனால் கிராமப்பகுதிகளில் கொரோனா தாக்கம் தெரியாமலேயே பலர் உயிரிழப்பதாகவும் பரவல் அதிகரித்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே கோவை மாவட்டத்திற்கு என சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா பரவலை கட்டுபடுத்தி இறப்பை தடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழகம் முழுவதும் கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதகாவும் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு என எந்த ஒரு அவசர உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.