Asianet News TamilAsianet News Tamil

நாளை முதல் இரவு நேர ஊடங்கு அமல்.. இந்த மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு..!

இரவு நேர ஊடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

night curfew...Additional buses to the southern districts
Author
Chennai, First Published Apr 19, 2021, 10:43 AM IST

இரவு நேர ஊடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. 

night curfew...Additional buses to the southern districts

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கின் போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது. 

night curfew...Additional buses to the southern districts

இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு  வருவதால் பகல் நேரங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios