அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில்  இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது குறத்து தகவல் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் எனவும்,   திருவள்ளூர்,  காஞ்சிபுரம், கடலூர் ,  ராமநாதபுரம் ,  தூத்துக்குடி ,  நெல்லை ,  மற்றும் விருதுநகர் ,  ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  சென்னை மற்றும் புதுவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான முதல் மழை பெய்யும் என்றும் தெளிக்கப்பட்டது.  இச்சூழலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது, 

நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.  கிண்டிர கத்திப்பாரா,  ஆதம்பாக்கம்,  பல்லாவரம் ,  கோடம்பாக்கம்,  அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  மழை பெய்தது .  இதனால் சென்னையில்  குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. பனிக்காலம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மழையின் தாக்கம் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.