அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்ககம்,  தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாகவும்,  அரபிக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகும், பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல்  கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.  குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி , தர்மபுரி, சேலம்,  விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டி 9 சென்டிமீட்டர் மழையில் 8 சென்டிமீட்டர் மழை கிடைக்கப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தமிழக மீனவர்கள் லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரளா கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.