Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 24 மணிநேரத்தில் பயங்கரம்...!! 12 மாவட்டங்களில், அடித்து ஊற்றப் போகிறது மழை...!!

இரவு முதல் விடிய விடிய கன மழை கொட்டித்தீர்த்தது, ஆனால் தூறல் நீடிக்கிறது.  இதனிடையே வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

next 24 hours heavy rail in 12 districts - met alert
Author
Chennai, First Published Sep 19, 2019, 9:23 AM IST

வளி மண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடல் காற்று அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.next 24 hours heavy rail in 12 districts - met alert

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடையிடையே  பரலவாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் . வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 12  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கன மழை கொட்டித்தீர்த்தது, ஆனால் தூறல் நீடிக்கிறது.  இதனிடையே வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 next 24 hours heavy rail in 12 districts - met alert

இரவு முழுவதும் மழை பெய்ததால் சென்னையில் சாலைகள் வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளான வட சென்னையின்  வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, தென் சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, புற நகர் பகுதிகளான் தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios