நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிகடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும்  புதுவையில் அடுத்த 24மணி நேரம் பொருத்தவரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் கடலூர்,  தஞ்சாவூர் ,  திருவாரூர் ,  ராமநாதபுரம் ,  தூத்துக்குடி,  திருநெல்வேலி,  ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24மணி நேரம் பொருத்தவரை நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு -6செ.மீ  திருப்பூண்டி ( நாகப்பட்டினம் மாவட்டம்)  - 5செ.மீ திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்)  -5செ.மீ காரைக்கால் -2செ.மீ புதுக்கோட்டை -2செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.  மீனவர்களுக்கான எச்சரிக்கை பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 29°செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை 25°செல்சியஸை ஒட்டியிருக்கும்.