சென்னையில் பிரபல நாளிதழில் பணியாற்றும் சுகாதார பிரிவு செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக கொரோனா வைரஸ் வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதை கட்டுப்பத்த மத்திய, மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் விரீயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், எந்த விடுப்பும் இல்லாமல் தனது உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினரைப் போலவே செய்தியாளர்களும் தங்களது பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் பிரபல நாளிதழில் பணியாற்றும் சுகாதார பிரிவு செய்தியாளருக்கு சளி, தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தங்கி வந்த திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷசன் மற்றும் அந்த தெரு பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர் பணியாற்றி வந்த நாளிதழ் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, வளர்ந்து வரும் பிரபல தனியார் டிவியில் உள்ளே வேலை செய்யும் ஒரு நபருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவருடன் பணிபுரிந்த 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை காவிரி மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.