Asianet News TamilAsianet News Tamil

ஜப்பான் ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல்... எல்இடி விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை...!

ஜப்பான் நாட்டில் உள்ளது போன்று சென்னையில் போக்குவரத்து புதிய சிக்னல் கம்பம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

New traffic signal in Japan style...introduced chennai
Author
Chennai, First Published Aug 15, 2020, 5:22 PM IST | Last Updated Aug 15, 2020, 5:22 PM IST

ஜப்பான் நாட்டில் உள்ளது போன்று சென்னையில் போக்குவரத்து புதிய சிக்னல் கம்பம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது உள்ள சிக்னல் முறையில் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறிய அளவில் இருப்பதால் சிக்னல்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் நீண்ட தூரத்திலிருந்து வருபவர்களுக்கும் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாக இருந்தது. ஏற்கனவே இதை சரி செய்யும் விதமாக சாலைகளில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி சிக்னல் விளக்குகள் ஏற்றவாறு எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த சோதனை முயற்சி தோல்வி அடைந்தது.

New traffic signal in Japan style...introduced chennai

இந்நிலையில், சென்னை  காந்தி சிலை அருகே தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்னல் தெரியும் வகையில் கம்பம் முழுவதும் எல்.இ.டி.விளக்குகள் ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பச்சை நிற சிக்னல் விழுந்தால் GO என்றும், ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் LISTEN என்றும், சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் STOP என்று மின்னணு அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு அவையும் சின்கலுக்கேற்றவாறு ஒளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 

New traffic signal in Japan style...introduced chennai

இந்த சின்கல் கம்பம் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களிடையே வரவேற்பை பொருத்து விரிவுபடுத்தப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிக்னல் முறை காரணமாக விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தடுப்பதற்காகவும் சோதனை அடிப்படையில் போடப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios