தெலங்கானா மாநிலத்துக்கான புதிய தலைமை செயலாகம் மற்றம் சட்டமன்ற கட்டிடம் கட்டும் பணியை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கி வைத்தார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாக பிரிக்கப்பட்டது. இதற்கான, பல்வறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டம் வெற்றியடைந்ததை யொட்டி, சந்திரசேகர ராவ், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

இதைதொடர்ந்து, மாநிலத்துக்கான தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டிடம் கட்ட முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்தார்.  இதையொட்டி நேற்று, தெலுங்கானா மாநிலத்துக்கான புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டும் பணிகளை, முதல்வர், சந்திரசேகர ராவ், துவக்கி வைத்தார்.

தலைநகர் ஐதராபாதில், ரூ.400 கோடி செலவில் கட்டப்பட உள்ள, புதிய தலைமை செயலகம், தற்போதைய தலைமைச் செயலகம் அமைந்துள்ள, உசேன் சாகர் ஏரிக்கரையில், மற்றொரு இடத்தில் அமைய உள்ளது.