Asianet News TamilAsianet News Tamil

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2022ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

Necessary steps should be taken to take santhan body to Sri Lanka.. Chennai High Court order tvk
Author
First Published Feb 29, 2024, 2:25 PM IST | Last Updated Feb 29, 2024, 3:23 PM IST

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிழந்தார். 

இதையும் படிங்க: 15 மாதங்களில் 4 முறை! அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்றாததால் வீட்டு வசதித்துறை செயலாளர்கள் இடமாற்றமா? அன்புமணி

இந்நிலையில், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதாக  தமிழக அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு சாந்தனை கடந்த 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: யார் இந்த சாந்தன்.? சென்னைக்கு வந்தது ஏன்.? ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியது எப்படி.?

மேலும் சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீததிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், சாந்ததனின் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான தூதரக அனுமதி ஆவணங்கள் அனைத்து உடனடியாக வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios